கோலாலம்பூர்: மலேசிய இந்திய மக்கள் கட்சியின் இணைவால் பெர்சத்து கூட்டணியின் சயாப் பிரிவினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மலேசிய இந்திய மக்கள் கட்சி பெர்சத்து தேசிய கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில் தேசியக் கூட்டணியில் புதிய கட்சி இணைத்துக் கொள்ளப்பட்டது பெர்சத்துவின் சயாப் பிரிவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், இது கூட்டணியை வேறு ஒரு புதிய பரினாமத்திற்கு வழிவகுக்கும் என்றும் அப்பிரிவைச் சேர்ந்த...
இந்திய தொழில்முனைவோருக்கான தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் முயற்சிக்கு, இந்திய வர்த்தகச் சங்கங்களும் தோள் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு ஏதுவாக, நாட்டிலுள்ள முன்னணி இந்திய வர்த்தகச் சங்கங்களுக்கும் துறை சார்ந்த அரசு சாரா அமைப்புகளுக்கும் அண்மையில் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவிக்கு முறையே விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தெக்குன் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர்களும்...
கோலா பெராங்: உலு திரெங்கானுவில் உள்ள செகாயு நீர்வீழ்ச்சியில் விழுந்த தனது நண்பர் ஒருவரைக் காப்பாற்ற முயன்ற 25 வயது நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோல திரெங்கானுவின் பாடாங் ஹிலிரானைச் சேர்ந்த ஷாயாபிக் ஹைகல் ஷாருதின் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், அப்பகுதியி மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டபோது, நீர்விழ்சியில் தவறி விழுந்த தனது நண்பரைக் காப்பாற்ற முயன்றதாக நம்பப்படுகிறது. நேற்றுக் காலை 11.18 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், நீர் மீட்புக்...
ஜோகூர்: சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் QR குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய குடிநுழைவு முறையை மலேசியக் குடிநுழைவுத்துறை நிர்வகிக்கும். சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல கடப்பதிழைக் காட்டுவதற்குப் பதிலாக, சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் பயணம் செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம். இந்தப் புதிய திட்டத்துக்கு முன்னோட்டமாக, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் ஏறி, ஸ்கேனர்களைப் பயன்படுத்தி ஊழியர்களின்...
ஷா ஆலம்: ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து அரசு ஊழியர்கள் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) இன் கீழ் விசாரணை நடத்த வசதியாக 32 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைவரையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் முஹம்மது சயாபிக் சுலைமான் உத்தரவு பிறப்பித்தார். 2018 முதல்...
புத்ராஜெயா: விண்ணப்பதாரர்கள் தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால்  குடிநுழைவு அதிகாரிகள் எந்தவொரு கடப்பிதழ் புதுப்பித்தல் அல்லது முதல் முறை விண்ணப்பத்தை நிராகரிக்காது என்று குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில், குடிநுழைவு அதிகாரிகள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க பல்வேறு அம்சங்களில் சில சோதனைகளை மேற்கொள்வார்கள் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இருப்பினும், இந்த சோதனைகள் தொழில் ரீதியாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட...
ஜோகூர் பாரு: வயது குறைந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொந்தியான போலீஸ் தலைமையகத்தில் பணிபுரிபவர் என்றும், மாலை 6 மணியளவில் தாமான் ஜோகூர் ஜெயாவில் 16 வயது இளைஞன் மீது இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார். 29 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) ஶ்ரீ ஆலம்...
ஊழியர் சேம நிதி வாரியத்தின் (EPF)  3ஆவது அல்லது நெகிழ்வான கணக்கு ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 17 அன்று ஸ்டார் தனது செய்தியில் மறுசீரமைப்புப்பானது 55 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களுக்கு EPF கணக்குகள் இரண்டிலிருந்து மூன்றாகப் பிரிக்கப்படும். EPF கணக்கு 1 கணக்கு பெர்சரான் (ஓய்வூதிய கணக்கு), கணக்கு 2 கணக்கு Sejahtera என மறுபெயரிடப்படும் மற்றும் புதிய கணக்கு 3 அல்லது "நெகிழ்வான...
சித்தியவான்: லுமுட்டில் அரச மலேசிய கடற்படையின்  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த லெப்டினன்ட் டி சிவசுதன் குடும்ப மகிழ்ச்சியை ஒட்டு மொத்தமாக கொண்டு சென்று விட்டார் என்று அவரின் தந்தை தெரிவித்தார். அவரின் தந்தை எம்.தஞ்சப்பன் (61) மற்றும் அவரது மனைவி ஆர்.பரமேஸ்வரி (60) கூறுகையில் மகனின் மறைவு  குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பறித்து சென்று விட்டது என்றனர். தஞ்சப்பன் கூறுகையில், மூன்று உடன்பிறந்தவர்களில் இரண்டாவது மகனான சிவசுதன், அதிக சத்தமாக பேச...
கோலாலம்பூர்:  போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படுவதாக கூரியர் சேவையில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து,  ஆறு சோதனைகளில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்தி இசா தெரிவித்தார். கும்பல் கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட சொகுசு குடியிருப்புகளை கிடங்குகளாகவும், மறு பேக்கேஜிங் மையங்களாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்தி இசா இங்கு செய்தியாளர்களிடம் கூறினார். இந்த கும்பல்...