புதிய கல்வி அமைச்சர்: நான் முடிவு செய்வேன்

புத்ராஜெயா –

புதிய கல்வி அமைச்சர் யார் என்பதை நான்தான் முடிவு செய்வேன் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறுகிறார்.

பிரதமர் என்ற முறையில் எனக்கு இருக்கின்ற தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய கல்வி அமைச்சரை நியமனம் செய்வேன்.

டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்குப் பதிலாக அந்த இடத்திற்கு எல்லாத் தகுதியும் வாய்ந்த ஒருவரை நான் நியமிப்பேன். மஸ்லீ மாலிக் பதவி விலக பல காரணங்கள் இருக்கலாம். பதவி விலகுவதாக அவர் எடுத்த முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார் மகாதீர்.

பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்த காரணத்தினால் பலத்த குறைகூறல்களுக்கு இலக்கானார் மஸ்லீ. அதனையடுத்து ஜனவரி 3ஆம் தேதி அவர் பதவி துறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here