செல்ஃபி எடுப்பது சிறந்ததா?

செல்ஃபி எடுப்பது சிறந்ததா?

செல்ஃபி எடுத்துக்கொள்வது வைரல் என்கிறார்கள். கொஞ்சம் பிங்கினால் வைரஸ் ஆகிவிடுகிறது. கொரோனா 19 போன்றே உலக நாடுகளில் ஒட்டிக்கொண்டது செல்ஃபி கலை.

உலகம் செல்ஃபியில் மூழ்க்கிகிடக்கும் இந்த வேளை, செல்ஃபி எடுப்பதிலும் ஆபத்து இருக்கிறது என்கிறார் ஒரு மருத்துவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் கூடிய கூட்டத்திலிருந்து பரவியதாக பேசப்படும் கொரோனா 19, செல்ஃபியின் வழியும் தொற்றியிருக்கும் சாத்தியத்தை மறுக்கவில்லையென்கிறார்.
இம்மாநாட்டுக்கு வந்தவர்கள் பயன்படுத்திய இ-ஹேய்லிங் வாகனங்களின் ஓட்டுநர்களும் மிகக்கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியம் உணரப்படவேண்டும் என்கிறார் அவர்.

சபைகூடுதல் என்பதில் மக்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதைவிட, சபை நடத்தாமல் இருப்பது இன்னும் நல்லது என்றும் அவர் கருத்துரைக்கிறார்.

ஆலயங்களின் கூடும் கூட்டத்தினால் இதுவரை பாதிப்பில்லை என்பது அசட்டுத் தைரியம். ஹோமப்புகை கோரோனாவுக்கு அலர்ஜியாகவும் இருக்கலாம்.
ஆனாலும் இது சரியான பாதுகாப்பு என்றும் கருதுவதற்கில்லை. நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் மட்டுமே தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு.

நோய் எதிர்ப்புங்க்தி என்பதை அறிவது எப்படி? கொரோனா தொற்று வருமா என்பதைச் சோதித்துப்பார்த்து அறிந்துகொள்ள முடியாது. வருவதுபோன்று இருந்தால சோதிக்காமலும் தவிர்க்க முடியாது.

மலேசியர்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அன்றாடம் 10 ஆயிரம் சோதனைகள் செய்யவும் நேரலாம்.

இதில், ஓர் அதிசயம் இருக்கிறது என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது. நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவர்கள் பெரும்பாலும் கடின உழைப்பைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அசுத்தம் கூடாது என்று மருத்துவம் கூறினாலும் அசுத்தமான தொழில் செய்வோரை கொரோனா 19 நெருங்கத் தயங்குகிறது என்கின்றனர்.
சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு கொரோனா வருமா என்று யோசிக்க வைக்கிறது.

கொரோனா தொற்றுக்கும் அசுத்தம் பிடிப்பதில்லை. அதனால்தான் அவர்களை கொரோனா நெருங்கதயங்குகிறது போலும்?

சுவாசக்கவசம் முக்கியமானதாக இருக்கிறது. இதன் தட்டுப்பாடு வணிகத் துரோகம் ஆகிவிட்டதால் இதற்கு மாற்றாக என்ன செய்யவேண்டும் என்பதை மலேசிய மருத்தவம் அறிவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

மருத்துவமனை முகப்பிடங்களில் சோதனைகள் தொடர்ச்சியானதாக இருந்தால் வருகையாளர்களில் நிலைமை புரியும்.

வெளிவட்டார நடவடிக்கைகளிருந்து விலகியிருத்தலும் கூட்டங்களில் கலந்துகொள்வதும் தவிர்க்கப்பட்டால் நன்மை உண்டு.

தனிமையில் இனிமை உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here