தும்மியவருக்கு சரமாரியாக அடி உதை

தும்மியவருக்கு அடி உதை

மும்பை,மார்ச் 19-

உலகெங்கிலும் உள்ள பொது இடங்களில் இப்போது சில பழக்க வழக்கங்கள் மாறி உள்ளன. மக்கள் முழங்கையால் கதவுகளைத் திறக்க முயற்சிக்கிறார்கள், ரெயில் பயணங்களில் பயணிகள் கைப்பிடியை பிடிக்க தவிர்க்கிறார்கள்.

அலுவலக ஊழியர்கள் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் தங்கள் மேசைகளைத் சுத்தம் செய்து கொள்கிறார்கள்.

அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள் மற்றும் உணவகங்களில் சுத்தம் செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது. தனியார் அலுவலகங்கள் மக்கள் கூடும் பூங்காக்கள் மற்றும் பொது வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

ரெயில் பயணங்களிலோ, பஸ் பயணங்களிலோ யாரவது ஒருவர் தும்மினாலோ, அல்லது இருமினாலோ அவரை அனைவரும் விசித்திரமாக பார்க்கிறார்கள்.

மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பீதியால் மக்கள் மிகவும் அலர்ட்டாக இருக்கிறார்கள்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பீதி காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மராட்டியம் . அங்கு 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உள்ளனர். அதனால் கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் கோலாப்பூரில் கூட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் தும்மியதாக ஒருவரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here