இலவச உணவு ; தன்முனைப்புப் பேச்சாளர் சங்கரின் முயற்சிக்கு ஓசை அறவாரியம் உதவி

டாமன்சாரா , ஏப். 8-

கோவிட் – 19 தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில் மக்கள் பலரும் வருமானம் இன்றித் தவிக்கின்றனர்.

குறிப்பாக ஒரு சிலர் உணவுகூட இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு பல நன்னெஞ்சங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் பிரபல தன்முனைப்புப் பேச்சாளரும் உணவக உரிமையாளருமான சங்கர் ஆர். சந்திரம் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தினமும் பலருக்கு உணவுகளைப் பொட்டலங்களில் வழங்கி வருகிறார்.

அவரின் இந்த மனிதநேய செயலுக்கு உதவும் வகையில் ஓசை அறவாரியம்        (OSAI FOUNDATION) கணி சமான தொகையை நேற்று வழங்கியது. மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ எஸ். சுந்தர், அவரிடம் இத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதுகுறித்து சங்கர் பேசுகையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலரும் உணவின்றி சிரமப்படுகின்றனர். குறிப்பாக அகதிகள், ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது முன்னிலைப் பணியாளர்களும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வேலைகளுக்குச் சென்றாலும் உணவு கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் நான், தி ஃபையர் கிரீல் (THE FIRE GRILL) எனும் என்னுடைய உணவகத்தின் வழி தினமும் உணவு தயாரித்து சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேச பகுதிகளில் உள்ள பல தரப்பினருக்கு வழங்குகின்றேன்.

என் இந்த முயற்சிக்கு நண்பர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் ஙெ்ய்து வருகின்றனர். நான் இதுவரை மொத்தமாக 3,500க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளேன்.

அவ்வகையில் என் முயற்சிக்கு உதவும் வகையில் டத்தோ எஸ். சுந்தர், மக்கள் ஓசை நாளிதழ், ஓசை அறவாரியம் சார்பாக கணிச மான தொகையை வழங்கியுள்ளார்.

அவரின் உதவி எங்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த முயற்சிக்கு உதவ முன்வருபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் சங்கர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்தச் சுழ்நிலையில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி புரிவது அவசியமாகும். அண்டை அயலார் தொடங்கி துன்பப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்று டத்தோ சுந்தர் கூறினார்.

இச்சுழ்நிலையில் பல சமூகச் சேவையாளர்கள் தங்களால் இயன்றவரை துன்புறும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். அதே சமயம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும். அவ்வகையில் மக்கள் ஓசை, ஓசை அறவாரியம் மக்கள் நலனுக்கு என்றும் முக்கியத்துவம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தத் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் 8007747132                    (PHG One Venture Sdn. Bhd.) என்ற சிஐஎம்பி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here