சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை சிம்ரன்

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர்.

சந்திரமுகி 2ஆம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி. வாசு தெரிவித்துள்ளார். இதில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து ஜோதிகாவிடம் கேட்டபோது சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அந்த படத்தில் நடிக்கும்படி யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை என்றார். சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here