ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம், கடந்த ஞாயிறு அன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
இந்த நிலையில் தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் எமி ஜாக்சன் யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.