மகனை சுத்தியலால் தாக்க முயன்ற தந்தை கைது

சொந்த மகனை சுத்தியலால் தாக்க முயன்றதாக கூறப்படும் தந்தையை காவல் துறை கைது செய்தது.

மின்துக்கி ஒன்றின் உள்ளே இருந்த எட்டு வயது மகனை அவரது தந்தை சுத்தியலால் தாக்க முயற்சிக்கும் காட்சி சிசிடிவி வாயிலாக கண்டறியப்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து 42 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார்.

ஆயர் ஈத்தாம், பண்டார் பாருவில் உள்ள வீடு ஒன்றில் ஆடவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆடவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஆடவருக்கு இதற்கு முன்னர் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here