புயலின் திசை மாற வாய்ப்பு !

நிவர் புயல் காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை நெருங்கும் போது திசை மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடலூர் அருகே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று  கணிக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி புயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புயல் வலுவடைகிறதா அல்லது வலுவிழக்கிறதா என்பதை பொறுத்து எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இன்று முடிவு செய்யலாம் என கூறப்பட்டிருக்கிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மகாபலிபுரத்தில் கடல் கரையை கடந்தால் சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here