சென்னை புத்தகக் திருவிழா பிப்ரவரி 24 தொடக்கம்!

44 ஆவது சென்னைப் புத்தகத் திருவிழா பிப்ரவரி மாதம் 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என பபாசி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறும். ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா காரணமாக புத்தகக்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் பபாசி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், சென்னை புத்தககாட்சி இந்தாண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடத்த பபாசி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் நடத்த நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.

நந்தனம் ஒய் . எம் . சி . ஏ திடலில் நடக்கும்  இப்புத்தககாட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர் .

ஏற்கனவே தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் , அதை முழுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here