சிறுநீரகத்தில் கல் உள்ளதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?

சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறிநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும், ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறிநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்மு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம்.

கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகக் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல் இருந்தால், அவர்கள் உடனடியாக முந்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பபத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here