ஈப்போ_
இங்குள்ள புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 18 மாணவர்கள் பதிவாகியுள்ளனர். புதிய மாணவர்களுக்கு டள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கம் குதூகலமான வரவேற்பு வழங்கியதாக சங்கத் தலைவர் டத்தோ மார்க் அருண் தாஸ் கூறினார்.
அதுமட்டுமன்றி காலையில் முன்னாள் மனிதவள அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் இப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்கொண்டார். இவரின் வருகையால் இப்பள்ளியின் 160 மாணவர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது தலைமையாசிரியர் மகாதேவன் தலைமையில் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. முதலாம் ஆண்டில் மேலும் 7 மாணவர்கள் பதிவு செய்தால் மொத்தம் 25 மாணவர்கள் இவ்வாண்டு கல்வி பயில்வர்.
ஆர்.கிருஷ்ணன்