– நாளை வெளியாகிறது
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.
ஒய்நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.
2020 மே 1 ஆம் நாள் (நாளை) ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் நாளை (ஜூன் 1 ஆம் நாள்) வெளியாகவுள்ளது.