நடிகர் சசிகுமாரின் புதிய படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

யாரம்மா அது , சம்யுக்தாவா! வாங்கம்மா!

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் சசிகுமார் இயக்குனராக, நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என பல ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் அவரது கைவசம் தற்போது ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எம்.ஹேமந்த் குமார்
இயக்கத்தில் உருவாகும்

படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்றவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here