போதைப்பொருள் கலந்த விருந்து – 15 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாருவில் ஒரு பொழுதுபோக்கு மையத்தின் விருந்தில் ஈடுபட்ட 15 வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று (நவம்பர் 21) இரவு சுமார் 10.30 மணியளவில் தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள மையத்தில் சோதனை நடத்தியதாக ஶ்ரீ ஆலாம் OCPD துணைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.

அண்டை நாட்டைச் சேர்ந்த ஒன்பது ஆண்களும் ஆறு பெண்களும் வளாகத்தில் விருந்து வைத்திருப்பதை நாங்கள் கண்டோம். நாங்கள் 30 வகையான மாத்திரைகள், போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தூள் பானங்களின் பாக்கெட்டுகள், டிஜிட்டல் அளவுகோல் மற்றும் ரொக்கமாக RM356 ஆகியவற்றையும்  கைப்பற்றினோம்.

சந்தேக நபரின் காலுறைகளில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 0.35 கிராம் சயாபு பாக்கெட்டையும் நாங்கள் கண்டுபிடித்தோம் என்று அவர் கூறினார். ஏழு சந்தேக நபர்களுக்கு மெத்தம்பேட்டமைன்  உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. 28 முதல் 38 வயதுடைய 15 சந்தேக நபர்களும் செல்லுபடியாகும் சமூக வருகை அனுமதிச் சீட்டுகளை கொண்டிருக்கவில்லை.

குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) மற்றும் 39A(1) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக சந்தேகநபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று துணைத் தலைவர் முகமட் சோஹைமி கூறினார்.

சந்தேக நபர்களின் நடவடிக்கைகள் தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதால், 2021 தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு விதிகளின் பிரிவு 17(1) இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் மற்றும் SOP ஐ மீறுவதைத் தவிர்க்கவும், எப்போதும் சமூக  இடைவெளியைப் பராமரிக்கவும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here