நாட்டின் பல மாநிலங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் -மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், மார்ச் 9 :

நாட்டின் பல மாநிலங்களில் இன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை, மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பிற்பகல் 1.15 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையில், சம்பந்தப்பட்ட பகுதிகளாக பேராக் (கோல கங்சார், கிந்தா, கம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம்) சிலாங்கூர் (உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட்); ஜெலேபு, நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை அடங்கும்.

மேலும் சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பேத்தோங், சரிகேய், சிபு, முக்கா, கபிட், பிந்துலு மற்றும் லிம்பாங் உள்ளிட்ட இடங்களிலும் இன்று மாலை 5 மணி வரை இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட மெட்மலேசியா எச்சரிக்கையில், சபாவின் சண்டகான் (தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலூரான் மற்றும் சண்டகான் ) மற்றும் குடாட் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாளை (மார்ச் 10) வரை மோசமான அளவில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு தொடர் மழை எச்சரிக்கையும் விடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here