தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக்கொன்று படகு மூலம் தீவை விட்டு சென்ற கணவன்

தெற்கு பசுபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு பிஜி. இந்நாட்டின் பல்வேறு தீவுகள் சுற்றுலா தளங்களாக உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இதனிடையே, அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டி ஜியோன் சென் (வயது 39) கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் (வயது 38) என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தேனிலவுக்காக கிரிஸ்டினா தனது கணவர் பிரட்லியுடன் கடந்த 7-ம் தேதி பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி தீவுக்கு வந்துள்ளார். அந்த தீவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் (ரிசார்ட்) கணவன் – மனைவி தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஓட்டலில் வைத்து கிரிஸ்டினாவுக்கும் பிரட்லிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரட்லி தனது மனைவி கிரிஸ்டினாவை கழிவறையில் வைத்து அடித்துக்கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு அந்த தீவில் இருந்து துடுப்பு படகும் மூலம் தப்பிச்சென்றுள்ளார். ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்த அறை ஒருநாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. மறுநாள் காலையும் அறை மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த பணியாளர் அறையில் கதவை திறந்து உள்ளே பார்த்துள்ளார். அங்கு கிரிஸ்டினா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு ஓட்டல் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கிரிஸ்டினா உயிரிழந்து 36 மணி நேரம் கழித்து அவரது உடலை ஓட்டல் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கிரிஸ்டினாவை கொலை செய்துவிட்டு ட்ருட்லி தீவில் இருந்து துப்பு படகு மூலம் தப்பிய பிரட்லி 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அருகில் உள்ள மடஹவெலியூ தீவுக்கு சென்றுள்ளார்.

மடஹவெலியூ தீவின் கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் சுற்றித்திரிவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் கடற்கரையோரம் சுற்றித்திரிந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பிரட்லி என்பதும் மனைவியை கொலை செய்துவிட்டு தீவு விட்டு தீவு தப்பிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நட்சத்திர ஓட்டலில் மனைவியை கொலை செய்த துடுப்பு படகு மூலம் தீவு விட்டு தீவு தப்பிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here