அதிரடியில் இறங்கியிருக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்… 105 பேர் கைது

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்ட விரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.

அடுத்தடுத்து அதிரடி கொடுத்துவந்த ரிஷி சுனக், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடி பிடித்து கைதுசெய்தார்.

அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக், ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார். இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதனை டுவீட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.த்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் ரிஷி சுனக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here