சவுதி அரேபியாவில் ரீ-ட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை

ரியாத்: ஒருவர் போட்ட ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, யூடியூப்பில் கருத்து தெரிவித்ததற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிகமாக மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு மதத்திற்கு எதிராக பேசவோ எழுதவோ முடியாது. கொலை, போதை பொருள் கடத்தல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் முகமது நாசர் அல்-காம்டி என்பவர் எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) சவுதி அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து மறுபதிவு செய்துள்ளார். அத்துடன் யூடியூபில் சவுதி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது நாசர் அல்-காம்டி என்பவர் மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டதாகவும், சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாகவும், பட்டத்து இளவரசர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதாகவும் சவுதி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி, முகமது நாசர் அல்-காம்டிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனித உரிமை ஆர்வலர்கள கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருவர் ரிடுவீட் செய்ததற்கெல்லாமா மரண தண்டனை விதிப்பீங்க..எங்க சார் சவுதி அரேபியா போகுது என்று கொதித்தபடி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் ஜோய் ஷியா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here