எங்க விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் காரணம் இல்ல. இமான் இப்போ புதுசா புலம்புறார்

டிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி இமான் வீசிய குற்றச்சாட்டு  தான், சோஷியல் மீடியாக்களில் மட்டுமல்ல திரைத்துறையிலும் பரபரப்பாக வைர லாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் அதுகுறித்து, வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறியதுதான் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.

இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் இமான். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போதே, என்ன காரணம் என ஆச்சர்யத்துடன் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

அதேநேரத்தில், என்ன துரோகம் என்று வெளிப்படையாக சொல்லாமல் வெறும் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்வது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கெடுக்கத்தான் என்று அவரது ரசிகர்கள் இமானுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்த சூழலில் இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்டிடம் பேசினேன்.

“சிவகார்த்திகேயன் எங்களோட குடும்ப நண்பர். ரொம்ப டீசன்ட்டான மனிதர். இமா னுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற அடிப்படையில, எங்கக் குடும் பத்துமேல அக்கறையா இருப்பாரு. என் மகள்களுக்கும் அவரைப் பிடிக்கும். அதனால தான், எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதானம் பேசி பஞ்சாயத் துப் பண்ணி வைக்க வந்தார். ஒரு குடும்பம் சிதறிடக்கூடாதுங்குற நல்லெண்ணத்துல நாங்க ஒற்றுமையா வாழணும்னு நினைச்சு சமாதான முயற்சிகளையும் எடுத்தார்.

அவரே விட்டுட்டுப் போயிட்டு, இப்போ எதுக்கு எங்களைப் பத்தி பேசணும். என் மகள் கள் மேல அவருக்கு கொஞ்சமும் பாசம் கிடையாது. அவரோட இன்ஸ்டா பாருங்க. என் மகள்களோட போட்டோவையா போடுறாரு? திருமணத்தைக்கூட பிள்ளைங்கக்கிட்ட சொல்லல. எல்லாம் முடிஞ்சபிறகு கொஞ்சநாள் கழிச்சு வந்துப் பார்த்தாரு. ஆனா, பிள்ளைங்க பார்க்கவேணாம்னு சொல்லிட்டாங்க. நான் பட்டக் கஷ்டத்தை பொண்ணுங்க கூடவே இருந்து பார்த்திருக்காங்க. அவங்களுக்கு என் கஷ்ட நஷ்டங்கள் எல்லாமே தெரியும். இமான் நல்லவரா இருந்தா, பொண்னுங்க அவரைப் பார்த்திருப் பாங்களே? ஏன் பார்க்கல?

இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியா இல்லை. அதனாலதான், இப்படி யெல் லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக்க விரும்புறார். பட வாய்ப்புகளையும் பிடிக்க நினைக் கிறார். யூட்யூப்ல அவர் இப்படி பேசினது, என்னைவிட சிவாகார்த்தி கேயனையும் அவரது குடும்பத்தையும் எந்தளவுக்கு பாதிக்கும்னு அவர் யோசிக்கல. இதை, நினைக் கும்போது 12 வருசம் இப்படிப்பட்டவரோடு வாழ்க்கையை வேஸ்ட் பண் ணிட்டே னேன்னு மீண்டும் வருத்தப்படுறேனே தவிர, அவர் பேசினதை விவாதிக்கிறதுக்கு எனக்கு நேரமே இல்ல.

எங்களுக்கு நல்லது பண்ண நினைச்சவருக்கு இப்படியொரு சங்கடம் ஆகிடுச்சு. இதுக்காக, நான் வருத்தப்படுறேன். அதுக்கூட சிவகார்த்தியேன், அந்தப் பஞ்சாயத்து டைம்ல பேசினார். அவ்ளோதான். அதுக்கப்புறம் அவர்கிட்ட நான் பேசவே கிடையாது.

என் மகள்களோட எதிர்காலத்துலயும் வேலையிலும் கவனத்தை செலுத்தி பிஸியா இருக்கேன். கடவுளும் என்னை ஆசிர்வதிச்சிருக்கார். மகள்களோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். மத்தபடி, இவர் பேசுறதையெல்லாம் கவனிக்க எனக்கு விருப் பமில்ல. தப்பு செய்றவங்கதான் ஃபீல் பண்ணிகிட்டு புலம்பிக்கிட்டு அழுதுகிட்டு இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. இமான், இப்போ அதைத்தான் செஞ்சிட்டிருக்கார்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here