அலோர் ஸ்டார்:

நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாலிங்கில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களும் பண்டார் பாருவில் ஒரு நிவாரண மையமும் திறக்கப்பட்டன.

பாலிங்கில், நேற்று பிற்பகல் 5.30 முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அங்கு திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 31 வீடுகளை உள்ளடக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடமளிக்க செக்கோலா கெபாங்சான் (SK ) ஸ்ரீ பேயு மற்றும் SK சியோங்கில் தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணி இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று,
பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, லெப்டினன்ட் (PA) முகமட் ஃபைசோல் அப்துல் அஜிஸ் கூறினார்.

அதேநேரத்தில் பண்டார் பாருவில், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் தங்குவதற்கு ஒரு நிவாரண மையமும் திறக்கப்பட்டது என்று, பண்டார் பாரு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் (PA) அப்துல் ரஹீம் கைருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here