காசா மீது அணுகுண்டு!  இஸ்ரேல் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல்:

காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் அணுகுண்டு வீசுவது என்பது இஸ்ரேலின் ஒருவகையான ஆப்ஷனாக இருக்கிறது என அந்நாட்டின் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் என்பது அணுகுண்டு தாக்குதலை நோக்கி செல்கிறதா? என்ற பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக காசா உள்ளது. இங்கு ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. காசாவுக்குள் இஸ்ரேலை நுழைய விடாமல் ஹமாஸ் அமைப்பு தடுத்து வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.மேலும் அடிக்கடி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வருகிறது.நாளை மறுநாள் வந்தால் இந்த போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவு பெறும்.

காசாவில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய அளவில் துப்பாக்கிசண்டை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த போரில் இஸ்ரேலில் 1,400க்கு அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.

காசாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக காசா நகரில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் இருதரப்பினரும் போரை கைவிட்டு பிரச்சனைக்கு பேசி சுமூக முடிவு காண வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதற்கு பிடி கொடுக்கவில்லை. தொடர்ந்து காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒட்சாமா இஹுடிட் கட்சியை சேர்ந்த அமிச்சாய் எலியாஹுவின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் பாரம்பரியத்துறை அமைச்சராக இருக்கும் இவர் வானொலியில் பேசி னார். அப்போது அவர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே காசாவில் நடக்கும் போர் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.

‛‛காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போரில் அணுகுண்ட வீசு வது என்பதும் இஸ்ரேலின் ஒருவரையான ஆப்ஷனாக உள்ளது” என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தான் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை அணுகுண்டு நோக்கி நகர்த்தி செல்கிறதா? என்ற பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here