குறைந்தபட்ச ஊதிய மறுஆய்வு 80 விழுக்காடு முடிவடைந்தது

கோலாலம்பூர்:

குறைந்தபட்ச ஊதிய மறுஆய்வு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

தேசிய ஊதிய ஆலோசனை தொழில்நுட்பக் குழு (JTPGN) நாடு முழுவதும் பொது ஆலோசனை மற்றும் 15 அமர்வுகளை நடத்தியதாக கூறிய அவர், குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாக இந்த அமர்வு முக்கியமானது என்று அவர் கூறினார்.

“இந்த ஆய்வு குறைந்தபட்ச ஊதிய விண்ணப்பத்தின் நோக்கத்தை வேலையின் பிற கூறுகளுக்கு விரிவுபடுத்தும் முகமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் அமைச்சகத்தின் 2024 வரவுசெலவு திட்ட மசோதாவின் குழு நிலை விவாதத்தின்போது உரையின் போது கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மதிப்பாய்வு, வறுமைக் கோடு வருமானம் (PGK) மற்றும் சராசரி ஊதியம் போன்ற சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்றார்.

இது முதலாளியின் ஊதியம், வேலையின்மை விகிதம், தொழிலாளர் உற்பத்தித்திறன், நுகர்வோர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here