அரசியல் நிலைத் தன்மையுடன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறது- மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது.

தொடக்கத்தில் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கிய போதிலும் இப்போது ஒற்றுமை அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மை உறுதியுடன் இருந்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர முடியும்.

இப்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் சரியான பாதையில் வலுவுடன் பயணிக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெரிதும் கவர முடியும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரசாங்கங்கள் கைமாறியது. மேலும் கோவிட் 19 நோய்த் தொற்றும் பொருளாதாரத்தை பாதிக்க செய்தது.

2022 இல் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்று இன்று நாட்டை சிறந்த முறையில் வழி நடத்தி வருகிறார்.

நாட்டை மீண்டும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஓராண்டுக்குள் எதையும் சாதித்து விட முடியாது. ஆகவே மலேசியர்கள் ஒற்றுமையுடன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் மனிதவள அமைச்சர் சிவகுமார் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PERKESO நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், நியோஸ் தலைமை செயல் முறை அதிகாரி ஹாஜி ஆயோப், டேலாண்ட் கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி தோமஸ் மேத்தியூஸ், மலேசிய இந்தியர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா, மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், பிகேபிடி நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ்,, ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ், கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here