மலேசியாவில் முதலீடுகளை செய்ய ஏழு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் விருப்பம்

மெல்போர்ன்:

லேசியாவில் முதலீடுகளை அதிகரிக்க ஏழு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன என்று தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

18 நிறுவனங்களின் வணிகத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு வட்டமேசை மாநாட்டின் விவாதத்தின் போது அவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இதைத் தெரிவித்தனர் என்றார்.

தற்போது ஏழு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஏற்கனவே உள்ள முதலீடுகளை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதையும் உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். 

முதலீட்டை இறுதி செய்யும் செயல்முறை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.  ஆனால் மிக முக்கியமாக அவர்களை மலேசியாவில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் என்றார்.

இந்த மாநாடு முடிந்ததும், ஆறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுடனான மற்றொரு சந்திப்பில் அன்வார் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அன்வார் அவுஸ்திரேலியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here