அடக்கடவுளே! ஆண்களால் மட்டுமல்ல ஆண் ரோபோவாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

சவுதி: சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்த கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த உலகமே இப்போது ஏஐ பின்னால் தான் சென்று கொண்டு இருக்கிறது. ஏஐ துறையில் உலகம் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்த ஏஐ துறையில் இப்போது ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த ஏஐ மூலம் உருவாக்கப்படும் ரோபோவாக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. வரும் காலத்தில் இந்த ஏஐ மூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதக் குலத்தையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.ஆபாசம்: இதற்கிடையே சவுதி அரேபியாவின் முதல் ஆண் ரோபோ, முஹம்மது, ஒரு லைவ் நிகழ்வில் ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த ரோபோவின் செயலை கடுமையாகச் சாடியுள்ளனர்.

அந்த பெண் நிருபர் ரோபோ குறித்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த ரோபோ திடீரென பெண்ணை நோக்கி ஆபாச செயலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரோபோ செயலை உணர்ந்த அந்த ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன் பின்னரே அந்த ரோபோ அமைதியாகிறது.

நெட்டிசன்கள்: நேரலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த செய்தி நிறுவனத்தால் இதைக் கட் செய்யும் முடியவில்லை. இதற்கிடையே இந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெண் நிருபரை ரோபோ தொல்லை செய்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதைக் கோட் செய்தவன் மிக மிகத் தப்பான முறையில் கோடிங் எழுதியுள்ளதாகச் சிலர் சாடி வருகிறார்கள்.

இன்னொரு நபர், “கடவுளே. இது என்ன பெண்களை டார்ச்சர் செய்யும் ரோபோவாக இருக்கு” என்று ஒருவர் சாடியுள்ளார். மற்றொரு நபர், “வக்கிரமான ரோபோ… இதையெல்லாம் எப்படி டிரைனிங் கொடுத்தார்கள் என்றே புரியவில்லையே” என்று சாடியுள்ளார். அதேநேரம் ஒரு தரப்பினர் ரோபோவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்து இருக்கலாம்.. ரோபோவில் உள்ள சிறு பிழை காரணமாக இது நடந்திருக்கலாம் என்பது அவர்கள் வாதம்.

ஏஐ டெவலப்பர்கள்: அதேநேரம் டெவலப்பர்கள் மீண்டும் இதில் முழுமையாக வேலை செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் இது சரிவர இயங்கும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர், சவுதி அரேபியா ஏஐ துறையில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைக் காட்ட அந்நாட்டு அரசே QSS சிஸ்டம்ஸ் மூலம் இந்த ரோபோவை உருவாக்கி இருந்தது. ஆனால், இது நெகடிவ் விமர்சனங்களையே பெற்று தந்துள்ளது. இந்த ஏஐ ரோபோ சவுதி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.. அப்போது அந்த ரோபோ, “நான் முஹம்மது.. மனித வடிவில் இருக்கும் முதல் சவுதி ரோபோ. செயற்கை நுண்ணறிவுத் துறையில் எங்களின் சாதனைகளை நிரூபிக்கும் தேசிய திட்டமாக என்னை உருவாக்கி இருக்கிறார்” என்று அந்த ரோபோவே தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது. சவுதியில் உருவாக்கப்பட்ட முதல் ஆண் ரோபோ இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here