நோன்புப் பெருநாள் முதல் நாளான இன்று, கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் லேசான புகைமூட்டத்துடன் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுக் குறியீட்டின் அடிப்படையில், காலை 11 மணி நிலவரப்படி பந்திங் மற்றும் கிள்ளானில் முறையே API 158 மற்றும் 153 என்ற அளவீட்டில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் செராஸ் மற்றும் கோலாலம்பூரில் காற்றின் தரம் API அளவீட்டில் 155 ஆக இருந்தது.
API அளவீடு 0 முதல் 50 என்பது ஆரோக்கியமானதாகவும், 50 முதல் 100 வரை மிதமான காற்று தரம் என்றும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



















