கோலாலம்பூர்:
ஒரு புதிய ஆய்வு, தினசரி ஐந்து முறை ஒரு நிமிடம் கடுமையான உடற்பயிற்சி செய்வது, ஆறு ஆண்டுகள் வரை, அகால மரணம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. இந்த உடற்பயிற்சியை, வீட்டு வேலைகள் செய்யும்போதும் செய்யலாம் என்று, `சிர்க்கியுலேஷன்’ (Circulation) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் (University of Sydney), வழக்கமாக உடற்பயிற்சி செய்யாத, 62 வயதிற்குட்பட்ட, 24,000 பேரின் உடல்நலத் தரவுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், மூன்று நிமிடங்கள், மிதமான உடற்பயிற்சி அல்லது ஐந்து நிமிடங்கள், தீவிரமான உடற்பயிற்சி, இதய நோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தது.
தினமும், சுமார் 14 நிமிடங்கள் தீவிரமாக உடற்பயிற்சி அல்லது 35-50 நிமிடங்கள் மிதமாகச் உடற்பயிற்சி செய்வது, அதிகபட்ச நன்மைகளை அளிப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு, முறையான உடற்பயிற்சி இல்லாமல், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, எளிய நடைமுறை உள்ளது என்பதைக் காட்டுகிறது.




















