புதிய பாஸ்போர்ட், மைக்காட் வடிவமைப்பு போலியானது – உள்துறை அமைச்சு!

கோலாலம்பூர்:

லேசியாவின் புதிய பாஸ்போர்ட் மற்றும் MyKad (அடையாள அட்டை) ஆகியவற்றின் புதிய தோற்றம் என்று இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வடிவமைப்புகள் அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அவை புதிய அடையாள ஆவணங்களின் உண்மையான தோற்றத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “இந்த ஆண்டில் புதிய பாஸ்போர்ட் மற்றும் மைக்காட் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியான் இஸ்மாயில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

எனினும், அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புகள் குறித்து அமைச்சின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மட்டுமே முறைப்படி அறிவிக்கப்படும் என்று இப்போது அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தவறான தகவல்களால் ஏமாற வேண்டாம் என்றும், இது போன்ற முக்கிய அறிவிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here