10 கடற்படை வீரர்களின் உயிரை பறித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு குறித்து  "வெறுக்கத்தக்க" கருத்து குறித்து சமூக ஊடக பயனர் ஒருவரிடம் போலீசார் விசாரணையை முடித்துள்ளனர். ஒரு அறிக்கையில் புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் ஷுஹைலி ஜைன் “சைஃபுதீன் ஷபிக்” ஒருவருக்குச் சொந்தமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கை ஆய்வு செய்ததாகக் கூறினார். "சைஃபுதீன்" குற்றவியல் சட்டத்தின் 504 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டார். இது அமைதியை...
ஜோகூர் பாரு குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) ஐந்து வயது சிறுமி தவறி விழுந்து மரணமடைந்தார். தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலமாட் கூறுகையில், மாலை 6.30 மணியளவில் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் மயங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறுமி 12ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பாதுகாவலர் தனியாக விட்டுவிட்டு அவர் மற்றொரு குழந்தையை...
கூலிமில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பில்  விசாரணைக்கு உதவுவதற்காக  44 வயதான இல்ல நடத்துனர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். தாமான் டேசா அமானில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 3.50 மணியளவில் போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக கூலிம் காவல்துறைத் தலைவர் முகமட் அஜிசுல் முகமட்...
ஜாசின் மெர்லிமா கம்போங் ஆயர் தவாரில்  நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 61 வயது முதியவரின் முகத்தில் சில்லி சாஸ் தெளிக்கப்பட்டது. புதன்கிழமை (ஏப்ரல் 24) காலை 10 மணியளவில் நடந்த சம்பவத்தில் ஊன்றுகோல் உதவியோடு வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்டவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக ஜாசின் OCPD துணைத் தலைவர் அஹ்மத் ஜமில் ராட்ஸி கூறினார். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பிய சிறிது நேரத்திலேயே தாக்கப்பட்டார் மற்றும் வீட்டில்...
பி.ஆர். ராஜன் வீட்டில் வைத்து பூஜைகள் செய்து வணங்கிடும்  சாமி சிலைகளை குப்பையில் கொண்டுபோய் சேர்ப்பது, கண்ட இடங்களில் தூக்கி எறிவது இதயத்தை வலிக்கச் செய்யும் ஒரு கொடூரச் செயலாக இருக்கிறது. தெருவோரங்களில் கடைவீதிகளில் வீசப்பட்டு வந்த தெய்வச் சிலைகள் இப்போது கடற்கரை ஓரங்களிலும்  கைவிடப்படுகிறது.  குறிப்பாக,  போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்புறமுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாகி இருக்கும் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு வரும்...
ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்ட விடுதியை திறக்கும் திட்டம் இருப்பதாக கூறுவதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். உண்மை இல்லை, உண்மை இல்லை. கேசினோ லைசென்ஸா... அது பொய், என்று சுருக்கமாக செய்தியாளர்களிடம் தனது கைகளால் இல்லை என்ற அடையாளத்தை உருவாக்கினார். ஜோகூர் வன நகர வளர்ச்சிக்காக மலேசியா இரண்டாவது சூதாட்ட உரிமத்தை பரிசீலித்து வருகிறது என்பது உண்மையா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இன்று முன்னதாக, அன்வார் இப்ராஹிம்...
க. கலை போர்ட்டிக்சன் ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்புறமுள்ள கடற்கரையில் சாங்கியம் என்ற பெயரில் நமது மக்கள் செய்திடும் பொல்லாத காரியங்கள் பின்னாளில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. பலமுறை எச்சரித்தும் ஆலோசனைகளைச் சொல்லியும்  இவர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.  அங்கு வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகங்களையும் இவர்களின் கண்களில் படுவதில்லை. இந்த இடத்தில் இனியும் எவ்வித சாங்கியங்களும் செய்யக்கூடாது என்று போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் இழப்பு, சிரமங்கள் யாருக்கு என்பதை...
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படாவி தேசிய இதய கழகத்தில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்லாவின் மருமகன் கைரி ஜமாலுதீன் கூறுகையில், தன்னிச்சையான நியூமோடோராக்ஸ் காரணமாக அவர் நேற்று IJN இல் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களால் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அல்ஹம்துலில்லாஹ், அவர் நன்றாக இருக்கிறார் ஆனால் ஓய்வு தேவை....
கோலாலம்பூர்: மலேசிய இந்திய மக்கள் கட்சியின் இணைவால் பெர்சத்து கூட்டணியின் சயாப் பிரிவினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மலேசிய இந்திய மக்கள் கட்சி பெர்சத்து தேசிய கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில் தேசியக் கூட்டணியில் புதிய கட்சி இணைத்துக் கொள்ளப்பட்டது பெர்சத்துவின் சயாப் பிரிவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், இது கூட்டணியை வேறு ஒரு புதிய பரினாமத்திற்கு வழிவகுக்கும் என்றும் அப்பிரிவைச் சேர்ந்த...
இந்திய தொழில்முனைவோருக்கான தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் முயற்சிக்கு, இந்திய வர்த்தகச் சங்கங்களும் தோள் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு ஏதுவாக, நாட்டிலுள்ள முன்னணி இந்திய வர்த்தகச் சங்கங்களுக்கும் துறை சார்ந்த அரசு சாரா அமைப்புகளுக்கும் அண்மையில் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவிக்கு முறையே விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தெக்குன் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர்களும்...