கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றுகிறார் நோர் ஹிஷாமுக்கு அங்கீகாரம்

பெய்ஜிங், ஏப்.16-

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மலேசிய சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

சீனாவிலிருந்து செயல்படும் குளோபல் டிவி நெட்வொர்க் நிறுவனம் மேற்கண்ட பாராட்டுதலை வழங்கியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிதானமாகவும் பொறுப்போடும் பதிலளிப்பது என நோர் ஹிஷாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குளோபல் டிவி பாராட்டியுள்ளது.

உலக ரீதியில் மூன்று மருத்துவர்களின் செயல்பாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.

பாராட்டு பெறும் மேலும் இருவர் அமெரிக்காவின் டாக்டர் அந்தோணி பாவ்சி, நியூ சிலாந்தின் டாகடர் ஆஷ்லி புளூம்பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here