தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகள்

ஈப்போ:
புந்தோங் சி கே ஏ கிளப் இவ்வட்டாரத்திலுள்ள 50 பி 40 மாணவர்களுக்கு பள்ளிச்சீருடைகள் , பள்ளி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்தனர். இப்பளளியின் மாணவர்களுக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம்  பள்ளிச்சீருடைகளை எடுத்து வழங்கினார்.
                    இந்த கிளப் அண்மையில்தான்  திறப்பு விழா கண்டாலும் மனிதநேய உதவிகளில் அக்கறை செலுத்தி,  செய்து வருகின்றனர். அவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட 5 ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்குவதாக அவர் கூறினார். இவர்களின் இத்தகைய நற்பணி மேலும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
                  இந்த கோவிட் 19 பிரச்சினைகள் முற்றுப் பெற்றவுடன், இங்குள்ள வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, வறுமையில் வாழும் இந்திய குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த கிளப்பின் தலைவர் வி. சிவானந்தன் கூறினார்.
                   அதுமட்டுமின்றி, சிறுநீரக சிகிச்சை பெறுவோருக்கு நிதியுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகவே, அடுத்த கட்டமாக இந்த திட்டங்கள் இந்த கிளப் அமலாக்கம் செய்யும் என்று அவர் கூறினார்.
               இந்நிகழ்வில், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம், ஈப்போ மாநகர் மன்ற கவுன்சிலர் ஆ.கணேசன்,  சி கே ஏ கிளப் தலைவர் வி. நித்தியானந்தன், துணைத்தலைவர் பி கே ஜெயகோபி, செயலவையினர் ,  பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
                                                     செய்தி: ஆர்.கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here