தீராத குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண ‘வேப்ப மர குச்சி’

வெளியில் இருந்து நமக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதை நாம் சுலபமாக சமாளித்து விடலாம், ஆனால் வீட்டிலேயே வரும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது தான் மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.

நம்முடைய ரத்த உறவுகளே நமக்கு எதிராகவும், நம் கருத்துக்களுக்கு எதிராகவும் இருக்கும் பொழுது நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் குழம்பி போய் விடுவோம். எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி, குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வேப்ப மர குச்சி மட்டும் இருந்தால் போதும். அதை வைத்து என்ன செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒருவருடைய வீட்டில் தேவையில்லாமல் சண்டையும், சச்சரவுமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் நல்ல சக்திகளின் ஆதிக்கம் குறைவாக இருக்கிறது என்பது பொருளாகும். நம்மை சுற்றி இருக்கும் அதிர்வலைகள் நல்ல அதிர்வலைகளாக இருக்கும் பொழுது தான் நம்முடைய சிந்தனையும் தெளிவாக இருக்கும்.

கெட்ட அதிர்வலைகள் அதிகம் இருக்கும் இடத்தில் தேவையில்லாத மனக் குழப்பங்களும், சஞ்சலங்களும் வரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அனுசரித்து செல்லாமல் சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். காரணமே இல்லாமல் சண்டை போடுபவர்களுக்கு மேற்கூறிய காரணம் நூறு சதவீதம் பொருந்தும்.

இதற்கு பரிகாரமாக வேப்ப மரத்திலிருந்து ஒரு சிறு குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அதனை உங்கள் வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களின் கையில் கொடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைக்கச் சொல்லுங்கள். வேப்ப மரக் குச்சியை கன்னிப் பெண்கள் தான் அதில் வைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு முடிச்சாக முடிந்து கொண்டு அதே பெண்ணின் கையால் பூஜை அறையில் வைக்கச் சொல்லுங்கள்.

இதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு நீங்கள் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது அதில் அதில் இருக்கும் அதிர்வலைகள் அதற்கு சக்தியை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது இதனையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

வேப்பமரத்தில் அம்பாள் வாசம் செய்கிறாள். அவர்களின் அனுகிரகம் கிடைக்க இவ்வாறு வேப்ப மரக் குச்சியை மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்து கொண்டால் போதும். நம் வேண்டும் வேண்டுதல்கள் அத்தனையும் இந்த ஒரு பொருளே நமக்கு நிறைவேற்றிக் கொடுத்து விடும்.

உங்களுடைய வேண்டுதல்களை நீங்கள் வைக்கும் பொழுது இதன் மேல் உங்களுடைய வலது கையை வைத்து மனதார உங்களுடைய பிரச்சினைகளை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல்கள் அம்பாளின் காதுகளுக்கு நிச்சயமாக இதன் வழியாக கேட்கும். இதன் மூலம் உங்கள் வேண்டுதல்கள் அத்தனையும் பலிதமாகும்.

குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்குவதற்கு இந்த பரிகாரம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இது உங்கள் வீட்டில் இருக்கும் வரை உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளும், மன கஷ்டங்களும் வருவதில்லை.

அபரிமிதமான சக்தி கொண்ட இதனை பூஜை அறையில் வைத்து கொள்ள முடியாதவர்கள், வீட்டில் நிலை வாசல் கதவின் மேலே நடுவில் மாட்டி வைத்து விடுங்கள். தீராத குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமையுடன், மன அமைதியுடன் இருப்பீர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here