கோலாலம்பூர்: புக்கிட் ஜாலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை (ஏப்ரல் 22) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இரவு 9.14 மணிக்கு புக்கிட் OUG காண்டோமினியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் ஜாலில், ஜாலான் ஹாங் துவா, ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் செபூத்தே தீயணைப்பு நிலையங்களின் அணிகள் தீ விபத்துக்கு பதிலளித்தன.
12 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ இரவு 10.31 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. ப யாரும் தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அது மேலும் கூறியுள்ளது.