3 காரணங்களை தவிர்த்து 12 வயதிற்கு உட்பட்டவர்கள் வெளியே செல்லத் தடை

பெட்டாலிங் ஜெயா: நடமாட்டக்கட்டுப்பாட்டு காலத்தின் போது,அவசர தேவை, மருத்துவ சிகிச்சை, கல்வி அல்லது உடற்பயிற்சி போன்ற காரணங்களைத் தவிர, 12 வயது மற்றும் அதற்குக் குறைவான அனைத்து குழந்தைகள் வெளியில் செல்வதைத் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 31), சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆதாம் பாபா கருத்து தெரிவிக்கையில், நாட்டில் மொத்தம் 82,341 கோவிட் -19 தொற்றுக்கள் குழந்தைகள் சம்மந்தப்பட்டவைகள் என்றும் 19,851 தொற்றுக்கள் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்புடையவை என்றும் 8,237 தொற்றுக்கள் (ஐந்து முதல் ஆறு வரை); 26,851 தொற்றுக்கள் (ஏழு முதல் 12 வரை) மற்றும் 27,402 தொற்றுக்கள் (13 முதல் 17 வரை), அவர் கூறினார்.

மேலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர்களை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here