பாட்டி குளிக்கச் சொன்னதால் அதிருப்தியடைந்த சிறுமி; தூக்கிட்டு தற்கொலை!

கோலாலம்பூர், (ஜூன் 30):

பேராக், தைப்பிங்கில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தனது பாட்டி குளிக்கச் சொன்னதால், அதிருப்தி அடைந்ததாக நம்பப்பட்ட, 11 வயது சிறுமி தனது படுக்கையறையில் படுக்கை இரும்பில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

நேற்று இரவு 7.52 மணியளவில் தனது 11 வயது பேத்தி படுக்கையறையில் புடவையில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்டு, பாதிக்கப்பட்டவரின் பாட்டி அதிர்ச்சியடைந்ததாக தைப்பிங் போலீஸ் தலைவர் ஒஸ்மான் மமத் தெரிவித்தார்.

“குறித்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்டவரின் கழுத்து உடைந்ததே மரணத்திற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் இறந்தவரின் கோவிட் -19 பரிசோதனையானது எதிர்மறையாக (negative) இருப்பது கண்டறியப்பட்டது ” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்பு, இறந்த சிறுமியை குளிக்கும்படி அவரது பாட்டி கூறியதாகவும் அதனால் சிறுமி கோபமடைந்ததாகக் கூறப்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் இறந்த சிறுமியின் பாட்டி படுக்கையறையில் பார்த்த போது இரு அடுக்குகள் கொண்ட கட்டிலில் புடவையில் தொங்கிய நிலையில் தனது பேத்தி மயக்கமான நிலையில் கிடந்ததை அவர் கண்டதாகவும் ஒஸ்மான் கூறினார்.

“அவரது 63 வயது பாட்டி உடனடியாக அண்டை வீட்டாரிடம் உதவிக்கு அழைத்ததாகவும் அவர்கள் அவசர தொலைபேசி எண்களுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவரை தைப்பிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

இறந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்து செய்த பின்னர் அச்சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இறந்த சிறுமியின் பாட்டி தனது பேத்தி பற்றிக் கூறியபோது, அவரது பேத்தி எப்போதும் அதிவேகமாக செயல்படுவதாகவும் (hyperactive), புது விஷயங்களை முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here