கோலா குபு பாரு: பெண் ஆட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மூத்த குடிமகன் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார். 60 வயதான ஷாரி ஹசான், நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா முன்னிலையில் ஒரு மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது விசாரணை கோரினார்.
ஜூலை 27 அன்று மதியம் 1.30 மணியளவில் ரவாங்கில் உள்ள கம்போங் சுங்கை புவாயா என்ற இடத்தில் ஒரு வீட்டின் பின்னால் இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு மிருகத்துடன் தானாக முன்வந்து உடலுறவு கொண்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.
துணை அரசு வக்கீல் சிதி கதீஜா அமீர் ஹம்ட்சா குற்றம் கடுமையானது என்பதால் ஜாமீனை எதிர்த்தார். எவ்வாறாயினும், ஷாரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோலாஸ்ராய் சோல்காப்லி, இது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாக இருப்பதால், விசாரணை முடிவடையும் வரை அவரது கட்சிக்காரர் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.
ஜாமீன் மறுத்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஜூலை 28 அன்று உலு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்சாத் கமருடின், ஆட்டின் உரிமையாளர் விலங்கு விசித்திரமான ஒலிகளை எழுப்பியதைக் கேட்டபின் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் கூறினார்.
சோதனை செய்ததில், ஆடுக்கு அருகில் அரை நிர்வாணமாக தனக்குத் தெரிந்த ஒரு மனிதனை கண்டார். சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடினார். ஆட்டை சோதித்தபோது அது இறந்து கிடந்ததைக் கண்டதாக அர்சாத் கூறினார். இதையடுத்து உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கால்நடை பராமரிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.