மலேசியாவின் முன்னாள் கால்பந்து வீரர் செர்பெகத் சிங் தனது 61ஆவது வயதில் காலமானார். முன்னாள் கோலாலம்பூர் வீரர் ஷெப்பி என்று தனது சக வீரர்கள் மற்றும் மலேசிய கால்பந்து ரசிகர்களிடையே அன்புடன் அழைக்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார்.
செர்பெகெத் 1978 இல் தனது கால்பந்தில் அறிமுகமானார். அவர் ஜோகூர் அணிக்காக விளையாடினார் மற்றும் 1996 வரை பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் பேராக் போன்ற அணிகளுக்காக விளையாடினார்.
1982 முதல் 1991 வரை மலேசியாவுக்காக விளையாடினார். செர்பெகெத் 1982, 1986 மற்றும் 1990 இல் மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார், மேலும் 1989 இல் SEA கேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடதக்கது.