4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறை-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

கலிபோர்னியா, நவம்பர் 10:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் டிராவிஸ் எட்வர்ட் மார்ட்டின் (37).

இவர் வென்ச்சுரா கவுண்டி மற்றும் ஆரஞ்சு கவுண்டியில் 2019-ம் ஆண்டு 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது 2021-ம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், ஆபாசப்படங்கள் தயாரிக்க ஒரு குழந்தையை பயன்படுத்தியதாகவும், குழந்தை ஆபாசப் படங்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்குகளில் மாட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here