சிலாங்கூரின் வெற்றி – தோல்வியை   தீர்மானிக்கப் போகும்  34 தொகுதிகள்

எம்.எஸ். மலையாண்டி
கோலாலம்பூர், ஜூலை 9-
3 கூட்டணிகளுக்குக் காத்திருக்கும் சவால்
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில்  மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் 34 தொகுதிகள் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய தொகுதிகளாக  உள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்கும்  அதனுடன் அரசியல் ஒத்துழைப்பை  ஏற்படுத்திக் கொண்ட தேசிய முன்னணிக்கும்  இந்த 34 தொகுதிகளில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளும் நடத்தப்போகும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இந்த முறை மிகவும் பரபரப்பான தாக அமையும் என்று கருதப் படுகிறது.
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்குத் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கும் என்றும் அரசியல் பார்வை யாளர்கள் கருதுகின் றனர்.
சிலாங்கூரில் தனது ஆட்சி அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்வதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி மிகத் தீவிரமாக இருக்கின் றது. ஆகஸ்டு 12இல் நடைபெறும் சிலாங்கூர் தேர்தலில் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என்று அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் அங்கை்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பெர்சத்து தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமை யிலான தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தை எப்படி யாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக நிறைய  தேர்தல் வியூகங்களை வகுத்திருப்பதாக அந்தக் கூட்டணியின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நம்பிக்கைக் கூட்டணி வசமிருக்கும் சிலாங்கூரைக் கைப்பற்றுவதுதான் தங்களுடைய முக்கிய இலக்கு எனவும் இந்த இலக்கை வெற்றிபெறச் ஙெ்ய்யும் பொறுப்பு மாநில தேசியக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எனவும் முஹிடின்  தெரிவித்திருக்கிறார்.
34 தொகுதிகளில் கடுமையான போட்டி 
தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள்படி சிலாங்கூர் மாநிலத்தில் மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தொகுதிகளாக 34 சட்டமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
இந்த 34 தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றியைப்  பதிவு செய்து விட வேண்டும் என்பது தேசியக் கூட்டணிகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.
நகர்ப்புற சட்டமன்றத் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்ற சுழ்நிலையில் மலாய் வாக்காளர்கள் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த 34 தொகுதி களில் வெற்றி பெறக்கூடிய அரசியல் கூட்டணி எதுவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த 34 தொகுதிகளிலும் எந்த அரசியல் கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்தக் கூட்டணியே சிலாங்கூர் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற கருத்தை அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
வட சிலாங்கூரில் யாருக்குச் செல்வாக்கு?
பாரம்பரிய முறையில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மை யாக இருக்கக்கூடிய தொகுதி களைப் பார்க்கும்போது அவற்றுள் பல தொகுதிகள் சிலாங்கூரின் வட பகுதியில்தான் அமைந்திருக் கின்றன.
இந்தத் தொகுதிகளில் வரக்கூடிய தேர்தலில் தேசிய முன்னணிக்கும் தேசியக் கூட்டணிக்கும் இடையே இதற்கு முன் இல்லாத அளவுக்குக் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் ஙே்ர்ந்த முஜிபுர் அபு அப்துல் முய்ஸ் கூறியிருக்கின்றார்.
நடப்பு அரசியல் சுழ்நிலையைப் பார்க்கும்போது இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது என்பது அரசியல் கூட்டணிகளுக்கு மிகவும் எளிதானதாக அமையப் போவதில்லை என்பது மட்டும் உண்மையாகும்.
வாக்காளர்களின் இதயங்களைக் கவர மிகச்சிறந்த தேர்தல் வியூகங்கள் இந்தக் கூட்டணிகளுக்குத் தேவைப்படு கின்றன. வாக்காளர்களைக் கவர்வதில் வெற்றி காணும் கூட்டணிக்குத்தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு 
சிலாங்கூரில் உள்ள தொகுதிகளில் 22 சட்டமன்றத் தொகுதிகள் மலாய், சீன, இந்திய வாக்காளர்கள் கலந்திருக்கக்கூடிய தொகுதிகளாகும். சில தொகுதிகளில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர் கள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கின்றது. இந்தத் தொகுதி களில் நம்பிக் கைக் கூட்ட ணிக்கே ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித் திருக்கின்றார்.
சிலாங்கூர் மாநில அரசை வழிநடத்தும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய முன்னணிக்கும் இடையே தற்போது அரசியல் ஒத்துழைப்பு ஏற்படுத் தப்பட்டிருக்கும் நிலை யில் அது இந்தக் கூட்டணிகளின் வேட்பாளர்களுக்குச் சாதகமான அம்சமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
இந்த முறை பாஸ், பெர்சத்து, கெராக்கான் ஆகிய கட்சிகளைக் கொண்ட தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள், இந்த இரண்டு அரசியல் கூட்டணிகளின் வேட்பாளர்களுடன் மோதவிருக்கின்றனர். ஆகவே போட்டி மிகக் கடுமையான தாக அமையும்.
நம்பிக்கைக் கூட்டணிக் கும் தேசிய முன்னணிக்கும் இடையே மாநில அளவில் ஒத்துழைப்பு இருக்கும் காரணத்தினால் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய 34 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணிகளின் வேட்பாளர்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
தேசியக் கூட்டணியால் சவால் 
இந்த நிலையில் சிலாங்கூரின் வட பகுதியில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் தேசியக் கூட்டணி வங்ம் இருக்கின்ற காரணத்தினால் அங்கு மற்ற இரண்டு கூட்டணிகளுக்குக் கடுமையான சவால் ஏற்படும் என்று சிலாங்கூர் பல்கலைக்கழகமான யூனிஙெ்ல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹம்டான் முகமட்  சாலே கருதுகின்றார்.
சுங்கை ஆயர் தாவார், சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங் உலு பெர்ணாம், பத்தாங்காலி, சுங்கை பெசார், பெர்மாத்தாங், ஜெராம், குவாங் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இந்தத் தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தேர்தல் களம் காணும் அரசியல் கூட்டணிகளின் இலக்காக அமைந்திருக்கிறது.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் சபாக் பெர்ணம், சுங்கை பெசார், தஞ்சோங் காராங், உலு சிலாங்கூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் யாரும் எதிர்பாராத வகையில் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது.
ஆகவே இந்த முறை சிலாங்கூர் மாநில வட பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி வரலாறு காணாத அளவுக்கு மிகக்கடுமையானதாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
சிலாங்கூரின் வட பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்றால்தான் அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற ஒரு கட்டாய நிலையில் வேட்பாளர்கள் இருக்கின்றார்கள்.
ஆயினும் தற்போது நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணியும் ஒரே குடையின் கீழ் இருக்கின்றன. ஆகவே கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசியக் கூட்டணிக்குக் கிடைத்த அதே ஆதரவு புறநகரங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசியக் கூட்டணிக்கே கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என்கிறார் இவர்.
சட்டமன்றத்தின் 56 இடங்கள்
சிலாங்கூர் ங்ட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள் உள்ளன. சொற்பப் பெரும்பான்மை வெற்றி கிடைக்க வேண்டுமானால் அரசியல் கூட்டணிகளுக்கு குறைந்தபட்சம் 29 இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும். 29 இடங்கள் கிடைத்தால்  சிலாங்கூரில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும்.
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி சிலாங்கூரில் 51 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய முன்னணிக்கு 4 இடங்களும் பாஸ் கட்சிக்கு ஓர் இடமும் கிடைத்தன.
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக கெஅடிலான் வங்ம் 19 இடங்கள் இருந்தன. அதே சமயம் லிம் குவான் எங்கை தலைவராகக் கொண்டிருக்கும் ஜஙெ்கவுக்கு 15 இடங்கள் இருந்தன.
டத்தோஸ்ரீ முகமட் சாபு தலைமையிலான அமானா கட்சிக்கு 6 இடங்களும் தேசிய முன்னணிக்கு 5 இடங்களும் பெர்ங்த்து கட்சிக்கு 4 இடங்களும் பார்ட்டி பங்சா மலேசியா எனப்படும் பிபிஎம் கட்சிக்கு 2 இடங்களும் பாஸ், பெஜுவாங், வாரிசான் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஓர் இடமும் இருந்தன.
ஒருவர் சுயேச்சை  சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இன்னொரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் களம் இறங்கிய நம்பிக்கைக் கூட்டணி சிலாங்கூரில் 16  நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றியது. கோத்தா ராஜா, பாண்டான், சிப்பாங், கோல சிலாங்கூர், ஙெ்லாயாங், கோம்பாக், அம்பாங், உலுலங்காட், பாங்கி, பூச்ங்ோங், சீபாங், பெட்டாலிங் ஜெயா, டாமன்ங்ாரா, சீங்கை பூலோ, ஷா ஆலம், கிள்ளான் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிபெற்றது.
அதே சமயம் தேசியக் கூட்டணி ங்பாக் பெர்ணம், சுங்கை பெசார், உலு சிலாங்கூர், தஞ்சோங் காராங், காப்பார், கோலலங்காட் ஆகிய ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
வரக்கூடிய தேர்தலில் இந்தத் தொகுதிகளில் இருக்கக்கூடிய ங்ட்டமன்றத் தொகுதிகளில்  இந்த முறை மூன்று கூட்டணிகளுக்கு இடையே மிகக்கடுமையான போட்டி நிலவப் போகிறது என்பது மட்டும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here