டேவிட் மார்ஷல் – N16-பிறை சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அறிக்கை.

பிறைக்கு டேவிட் மார்ஷல்

1. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிறை ஆற்றை மையமாகக் கொண்ட சுற்றுச்சூழல் சுற்றுலாத் மற்றும் பொருளாதாரம் சமூக மேம்பாடு.

– தாமான் கிம்சார் சுற்றுச்சூழல் பூங்காவின் கட்டுமானம்

– தாமான் கிம்சார் தாமான் துங்கு, செபராங் ஜெயா வரை பிறை ஆற்று வழியாக தாமான் இண்டிராவாசி வரை ஓட்டத் தடம் கட்டுதல்.

மேலும் கூடுதல் திட்டங்கள்

– அலையாத்தி மரங்கலூடே மெது ஓட்ட தடம் அமைத்தல்.

– பிறை பழைய சந்தை இடத்தில்
சயாம்-பர்மா மரண ரயில்வேயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுச்சின்னம் அமைத்தல்.

– தேசிய சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க புதிய படகுத் துறை கட்டுதல்.

2. பிறையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுத் திட்டம்.

-வேட்பாளர், முன்னாள் கவுன்சிலரான என்னிடம் பிறையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்தை சரி செய்ய திட்டம் உள்ளது.

3. கம்போங் மானிஸ் வீட்டுத் திட்டம் தொடர்பாக சுமார் 220 குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

4. SJKC Chung HWA சீனப் பள்ளியை சாய் லெங் பார்க் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத தளத்திற்கு மாற்றப்படும்.

5. சாய் லெங் பார்க் மண்டபம் குடியிருப்பாளர்களின் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டுமாடி மண்டபமாக மேம்படுத்தப்படும்.

6. பிறை ஜெயா நகரத்தில் வசிப்பவர்களுக்கு அடுக்குத்தள உரிமை பட்டா வழங்குதல்.
பண்டார் பிறை ஜெயா & மெகாமால் ஆகிய பகுதியில் நவீனமையமாக்கப்பட்டு விற்பனை மற்றும் கொள்முதல் செய்யும் வகையில் சொத்து மதிப்பை மேம்படுத்துதல்.

7.தாமான் சாய் லெங் உணவு மையமாக “ஹாட்ஸ்பாட்” பகுதியாக உருவாக்குதல்.

8. கடந்த 15 ஆண்டு கால முயற்சியில் பிறை வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மேம்பாடு காணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here