“ஒற்றுமை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் ஏதேனும் ஊழல் நடந்துள்ளதா” – MACC விசாரிக்க வேண்டும் என்கிறது PAS

கோத்தா பாரு:

ற்றுமை அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீடு பெறும்போது ஊழல் நடந்துள்ளதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துகிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் குறித்த நடவடிக்கைகளில் ஊழலின் கூறு தெளிவாக உள்ளது என்றும், இந்த விஷயத்தைப் பற்றி MACC ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும், மேலும் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அறிக்கை அளிக்காமலேயே விசாரணை செய்வது MACC யின் பொறுப்பு என்று PAS துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

மேலும் “ஒதுக்கீடுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான அழுத்தமாக மத்திய அரசு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

எங்களைப் பொறுத்தவரை, அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்கி, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், இது நடக்கக்கூடாது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமமான ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள சுல்தான் முஹமட் IV மைதானத்தில் நடந்த கிளாந்தான் மட்டத்தில் ஷரியா சட்டம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான ஒற்றுமைக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின் பின்னர் அவரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் கிளாந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் தாவூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here