அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 593 குடும்பங்களைச் சேர்ந்த 1,885 பேராகக் குறைந்துள்ளது, இது நேற்று இரவு 736 குடும்பங்களைச் சேர்ந்த 2,366 பேராக இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெந்தோங், கோத்தா ஸ்டார் மற்றும் போக்கோக் சேனா மாவட்டங்களில் உள்ள 18 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று, சமூக நலத் துறையின் தகவல் போர்ட்டல் தெரிவித்துள்ளது.










