வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுள்ளவர்களுக்காக 16 சிறப்பு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

கோல திரெங்கானு, மார்ச் 1 :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களை அல்லது தொற்றுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தங்க வைப்பதற்காக, மாநிலத்தில் மொத்தம் 16 சிறப்பு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திரெங்கானு மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் காஸ்மானி எம்போங் இதுபற்றிக் கூறுகையில், கடந்த வியாழன் முதல் அனைத்து சிறப்பு தற்காலிக நிவாரண மையங்களும் திறக்கப்பட்டன.

இது கோல திரெங்கானுவில் 4 நிவாரண மையங்களும் கெமாமானில் 3 நிவாரண மையங்களும், பெசூட்டில் 3 நிவாரண மையங்களும் மற்றும் டுங்கூன், உலு திரெங்கானு மற்றும் கோல நெராஸில் தலா 2 நிவாரண மையங்களும் திறக்கப்பட்டன என்றார்.

“இதுவரை, மொத்தம் 49 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் நெருங்கிய தொடர்புகளில் இருந்த 78 பேர் இந்த சிறப்பு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“கோவிட்-19 க்கு நேர்மறையாக இருப்பவர்கள் வகை ஒன்றில் உள்ளனர் என்றும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். மேலும் அவர்களின் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.

சிறப்பு நிவாரண மையங்களில் தங்கியிருப்பார் நேரடியாகவே வீட்டிலிருந்து அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு, தற்காலிக நிவாரண மையங்களில் இதுவரை எந்த நேர்மறையான கோவிட் -19 வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும், கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அனைத்து தரப்பினரும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) கடைப்பிடிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here