நெருக்கடிக்கு மத்தியில் புதினுக்கு ஆசிட் டெஸ்ட்.. ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. கவனிக்கும் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க புதின் தீவிரம் காட்டி வருகிறார். புதினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புதின் ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். புதினின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ரஷ்ய அதிபர் தேர்தல்: கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புதினுக்கு உள்நாட்டில் கடுமயையான எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல், சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புதினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. அதிபர் தேர்தலில் புதின் சுயேட்சையாக போட்டியிடுகிறார். புதினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சில இடங்களில் அங்கு வீடுகளுக்கே சென்று வாக்கினை அதிகாரிகள் பெற உள்ளனர்.

80 சதவீத வாக்குகள் பெறுவார்?: உக்ரைன் தேர்தல் ரஷ்யாவில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தினாலும் தற்போது களத்தில் உள்ள 3 பேருமே உக்ரைன் மீதான போருக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்களே என்பதால், தேர்தலில் உக்ரைன் போர் பெரிதாக எதிரொலிக்காது என்று கூறப்படுகிறது. இது புதினுக்கு ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி அதிபர் புதினின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியும் உயிரிழந்து விட்டதால், களத்தில் அவர் இல்லை. இதனால், 80 சதவீத வாக்குகளுக்கு மேல் புதின் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால், 5-வது முறையாக புதின் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் நடைபெறும் இந்த தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

கேரளாவில் வாக்குச்சாவடி: ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்களிக்க கேரளாவிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வசிக்கும் ரஷ்ய குடிமக்கள் வாக்களிப்பதற்காக திருவனந்தபுரத்தில் ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மூன்றாவது முறையாக இது போன்று வாக்குச்சாவடிகள் அமக்கப்பட்டு இருப்பதாகவும் ரஷ்ய குடிமக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here