கல்லறைக்கு சென்ற ஆடவர் SOP யை மீறிய குற்றச்சாட்டில் 2,000 வெள்ளி அபராதம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21:

நெகிரி செம்பிலான், ஜெம்போலில் உள்ள கல்லறைக்கு சென்ற ஆடவருக்கு (21) நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கின் SOP யை மீறிய குற்றத்திற்காக 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தேசிய மறுவாழ்வு திட்டத்தின் (PPN) இளைஞர்கள் சிறப்புக் குழுவினரால் நேற்றுக் காலை 11.40 மணிக்கு இஸ்லாமிய கல்லறைக்கு சென்ற ஒரு ஆடவர் ஃபெல்டா பாலோங் கல்லறை 12 க்கும் 13 க்கும் இடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

குறித்த ஆடவருடன் மோட்டார் வண்டியில் அவரது உறவினர்களான இரு சிறுவர்களும் சென்றதாகவும்  அவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக, 1988 ஆம் ஆண்டில் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் அவருக்கு அபராதம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) வெளியிட்ட ஹரி ராயா எயிலாதா SOP யின் படி, புனித யாத்திரைகள் , கல்லறை தரிசனங்கள் மற்றும் விருந்துகள் அல்லது திறந்த இல்லங்கள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here