அனைவருக்கும் சமச்சீரான கல்வி.

பி.ஆர். ராஜன்

மலேசியாவில் வாழ்க்கையில் அனைத்துத் தரப்பினரையும் சேர்ந்த பிள்ளைகளுக்கு சமச்சீரான கல்வி வாய்ப்புகளை வழங்கும் கடப்பாட்டில் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வங்தி படைத்தோர் – வங்தி இல்லாதோர் என்ற பாகுபாடுகளைத் தகர்த்தெறிந்து ஒவ்வொரு பிள்ளையும் சமமான கல்வி வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில் ஒற்றுமை அரசாங்கம் குறிப்பாக கல்வி அமைச்சு உறுதியான போக்கைக் கொண்டிருக்கிறது.

ஒதுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளும் உடற்பேறு குறைந்தவர்களும் இந்தக் கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதில் ஒற்றுமை அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுத்து செயலில் இறங்கி இருக்கிறது.

கேள்வி: மனித நேய (Manusiawi) கல்வி என்றால் என்ன?

* நாட்டின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளர்களாக  சிறார்களையும் இளைஞர்களையும் கட்டொழுங்குமிக்கவர்களாகவும் பக்குவப்பட்டவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற கல்வி முறையில் மலேசிய கல்வி அமைச்சின் கொள்கையோடு இணங்கிப்  போகும் ஒரு கொள்கையாகும்.

* தரமான கல்வியைப் பெறுவதிலிருந்து எந்தவொரு பிள்ளையும்  பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதாகும்.

கே: மனித நேயக் கல்வி 2013-2025 மலேசிய கல்விப் பெருந்திட்டத்தோடு எவ்வாறு இணைந்து போகிறது? அதன் அகண்ட கல்வி இலக்குகளும் நோக்கங்களும்  எவ்வாறு தேசிய மேம்பாட்டிலும் முன்னேற்றத்திலும் பங்களிக்கப் போகிறது?

* மனித நேயக் கல்வியை நடைமுறைப்படுத்துவது என்பது மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றும் ஒரு திட்டமாகும்.

* ஒரு நாட்டின் மேம்பாடும் வளர்ச்சியும் அதன் மக்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி ஆற்றலோடு மனிதநேயம் சேரும்போது கல்வி முறை நாட்டு நிர்மாணிப்பில் பங்களிக்கக்கூடிய இளம் தலைமுறையினருக்கு ஓர் ஊக்கச் சக்தியாகத் திகழ்கிறது.

கே: உடற்பேறு குறைந்தவர்கள்,  ஒதுக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் உட்பட மாணவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் மனிதநேயக் கல்வி எவ்வாறு செயல்படுகிறது?

* யார் எந்தப் பின்னணியில் இருந்து வருகின்றவர் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொரு பிள்ளையும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதுதான்  மலேசியக் கல்வி அமைச்சின் லட்சியமும் இலக்கும் ஆகும். இதை நனவாக்கும் வகையில் மனிதநேயக் கல்வி அதனோடு இணைந்து செயல்படுகிறது.

* தரமான, சமத்துவமான கல்வியைப் பெறுவது என்பது மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் விருப்பமாகும்.  இந்த விருப்பங்களின் அடிப்படையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

*  சிறப்பு மோடல்: SBJK  எனப்படும் பரிவுமிக்க கல்வியைப் போதிக்கும் பள்ளி, SDH  எனப்படும் மருத்துவமனைக்குள் பள்ளி. உயர்நெறிப் பள்ளி, ஹென்ரி கெர்னி பள்ளி.

*  K9 எனப்படும்  சிறப்பு விரிவான பள்ளி, K11 எனப்படும்  விரிவான பள்ளி.

*  (MBPK) எனப்படும்  சிறப்பு கல்வித் தேவையுள்ள மாணவர்கள்

*  திறமையான, இயற்கை திறன்மிக்க  மாணவர்கள்.

கே:பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும்  மனிதநேயக் கல்வியை அறிமுகம் செய்து அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னெடுத்திருக்கும் திட்டங்கள் அல்லது குறிப்பிட்ட கொள்கைகள் என்ன?

* மலேசியக் கல்வி பெருந்திட்ட 2013-2025 வழிகாட்டலோடு மலேசியக் கல்வி அமைச்சு ஏற்கெனவே இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

*  திட்டங்கள்:

  1. i. சிறப்புத் தேவை பிள்ளைகளுக்கு தரமான கல்வி, அணுகுமுறையை அதிகரிப்பது
  2. ii. சிறப்புத் தேவை பிள்ளைகளுக்கு தரமான கல்வி, அணுகுமுறையை அதிகரிப்பது டிடிடி. சிறப்புத்    தேவை பிள்ளைகளுக்கு தரமான கல்வி, அணுகுமுறையை அதிகரிப்பது.

கே: நாட்டிலுள்ள மாணவர்கள் ஆக்கப்பூர்வமான வகையில் மனிதநேயக் கல்வி அனுபவத்தைப் பெற்றிருப்பதற்கான திட்டங்கள் அல்லது வெற்றிகள் குறித்த உதாரணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

* SBJK எனப்படும் பரிவுமிக்க கல்வியைப் போதிக்கும் பள்ளி.

*அனைவருக்கும் கல்வி என்ற யுனெஸ்கோ கோட்பாட்டிற்கு இணங்க மாணவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற ஒரு கல்வி முறையை மலேசியக் கல்வி அமைச்சு இந்த சிறப்புப் பள்ளியில் அறிமுகம் செய்திருக்கிறது.

கோலாலம்பூர் சௌகிட்டில் 2013ஆகஸ்டு 19ஆம் தேதி இந்தப் பள்ளி செயல்படத் தொடங்கியது.  கோலாலம்பூர் மாநகரின் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள், தெரு சுற்றுச்சூழல் சூழ்ந்த பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அதிகாரப்பூர்வக் கல்வியை வழங்கும் முயற்சியாக இது விளங்கியது. இந்தப் பள்ளியானது பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரை மாணவர்களை  ஏற்றுக்கொண்டது.

எஸ்பிஜேகே மாணவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். சமூகப் பிரச்சினைகள்,  ஆவணங்கள் இல்லாத பிள்ளைகள்,  ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு 2 வகைகளில்  கல்வி அடிப்படையாகப் போதிக்கப்பட்டது.

  1. i. தவிர்க்கப்பட வேண்டியது –  போதைப்பொருள்/ மதுபானம்,   பாலியல் நடவடிக்கைகள்,  துன்புறுத்தல்/ குண்டர் கும்பல்
  2. ii. கொடுத்தல்- நேசம்,  முறையான கல்வியைப் பெறுதல்

எஸ்.பி.ஜே.கே., மலேசியக் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் வழி இந்தப் பிள்ளைகளின் வலிகளுக்கும் சோதனைகளுக்கும்  ஒரு முடிவு கட்டப்பட்டது. வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால்களிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர முடிந்தது. தரமான கல்விக்கான வாய்ப்புகள், இடம் அளிக்கப்பட்டதில் அவர்களின் சொந்தத் தரத்திற்கேற்ப சிறந்த மனித மூலதனத்தை உருவாக்க முடிந்தது.

SDH எனப்படும் மருத்துவமனைக்குள் பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு  சௌகரியமான கல்வி கற்றலை வழங்கும்  இடமாக மருத்துவமனைக்குள் பள்ளித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சுகாதார, உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு  ஏற்புடைய கல்விச் சேவையை வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.  ஒரு சௌகரியமான சூழலில் இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு  வாய்ப்பு அமைத்துத் தரப்படுகிறது. அவர்கள் குணமடையும் வரையில்  அவர்களின் உடல் ரீதியான இயல்பான வளர்ச்சிக்கு தொடர் கல்வியை வழங்குவது இதன் நோக்கமாகவும் ஆதரவு நல்குவதாகவும் உள்ளது.

11 மாநிலங்களின் 17 SDH பள்ளிகள் 2023 வரை செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைக்குள் பள்ளிகள் எங்கு உள்ளன. எப்போது தொடங்கப் பட்டன என்பது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

  • SDH Hospital Serdang Selangor (2011);
  • SDH Hospital Tunku Azizah, W.P.Kuala Lumpur (2011);
  • SDH Hospital Ampang, W.P.Kuala Lumpur  (2011);
  • SDH Hospital Pakar Kanak- Kanak, W.P.Kuala Lumpur (2012)
  • SDH Hospital Sultanah Aminah,  Johor (2012);
  • SDH Hospital Sultan Haji Ahmah Shah, Pahang (2012);
  • SDH Hospital Universiti Sains Malaysia, Kelantan (2012);
  • SDH Pusat Perubatan Universiti Malaya, W.P. Kuala Lumpur (2013);
  • SDH Hospital Selayang Selangor (2013);
  • SDH Hospital Pakar Sultanah Fatima Johor (2013);
  • SDH Hospital Tuanku Jaafar Seremban, Negeri Sembilan (2014);
  • SDH Hospital Umum Sarawak, Sarawak  (2014);
  • SDH Hospital Wanita dan Kanak-Kanak Likas, Sabah (2014);
  • SDH Hospital Sultanah Nur Zahirah,Terengganu (2015);
  • SDH Hospital Tawau Sabah (2015);
  • SDH Hospital Sultanah Bahiyah, Alor Setar, Kedah (2023);
  • SDH Hospital Tuanku Fauziah, Kangar, Perlis (2023)

மருத்துவமனைக்குள் பள்ளி எனும் திட்டத்தின் கீழ் கல்வி கற்பது என்பது பெரும் மகிழ்ச்சியைத் தரவல்லது. தளர்வான மேலும் சௌகரியமான சூழ்நிலையில் மனமகிழ்ச்சியுடன் கற்பதற்கு வகை ஙெ்ய்கிறது. இந்த அணுமுறையானது நோய் தீர்க்கும் அம்சமாகவும் விளங்குகின்றது.  மாணவர்கள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விரைந்து குணமடைய உதவுகிறது.

கே: கல்வி முறையில்  மனிதநேயக் கல்வி அமலாக்கத்தை விரிவுபடுத்தும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அப்படி இருந்தால் இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

* மலேசியக் கல்வி பெருந்திட்டம் நிறைவு பெற்ற பின்னர் அதனைத் தொடர்வதற்கு மலேசியக் கல்வி அமைச்சு ஒரு புதிய வியூக உருமாற்றத் திட்டத்தை உருவாக்குவதற்கு தயாராகி வருகிறது. இது திட்டமிடப்பட்ட ஒரு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய திட்டம் மடானி  கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும்.  அதே சமயம், இதன் ஓர் அங்கமாக மனிதநேயக் கல்வியும் இணைக்கப்படும். ஒழுக்க நெறிமிக்க மாணவர்களையும் உலகளாவிய அளவில் திறன்மிக்க போட்டிகளைத் தரக்கூடிய மாணவர்களையும் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

  1. சமச்சீரான கல்வியைப் பெறுவர்: நகர்ப்புறம், புறநகர்ப் பகுதிகள், ஒதுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்துத் தரப்பினரும் சமச்சீரான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கி மலேசியா பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில் பாதியில் படிப்பைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மாணவர் சேர்ப்பை அதிகரித்து பாதிக்கப்பட்ட, குறைபாடுகள் நிறைந்த சமூகப் பிள்ளைகளுக்கு நிறைவான வாய்ப்பை வழங்கும் திட்டங்களை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
  2. யாரும் விடுபடாத கல்வி: உடல்பேறு குறைந்த, சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளும் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு அதற்குரிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை மலேசியா முன்னெடுத்து வருகிறது. பிரதான பள்ளிகளுக்கு உட்பட்டு தரமான கல்வியை இவர்கள் பெறும்வகையில் ஆதரவும் நிதி வளமும் வழங்கப்படும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
  3. பாலர் பள்ளி: பிள்ளைகள் பாலர் பள்ளி கல்வியைப் பெறுவதை  அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது.  பாலர் பள்ளி கல்வியை மேம்படுத்தி விரிவுபடுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கல்விப் பயணத்தில் அனைத்துப் பிள்ளைகளும் வலுவான அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு முயற்சிகள் தொடரும்.
  4. சுதேசி மக்களுக்கான  கல்வி: சுதேசி எனப்படும் பூர்வக்குடிமக்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் முயற்சிகளில் மலேசிய அரசாங்கம் மிகுந்த கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இவர்களின் பிள்ளைகளும்  தரமான கல்வியைப் பெறுவது உறுதி செய்யப்படும். இவர்களுக்கான பள்ளிகளை நிர்மாணிப்பதும் பொருத்தமான பாடத் திட்டங்களை வழங்குவதும் இதில் அடங்கும்.
  5. தொழில்நுட்பம், தொழில்கல்வி, பயிற்சி (திவெட்): மாணவர்களுக்கு ஒரு மார்க்க வழியாக மலேசிய அரசாங்கம் திவெட் கல்வித் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. திறன்மிக்க மனித மூலதனத்தை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு கல்வி வாய்ப்புகளை நம் பிள்ளைகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் திட்டங்களில் திவெட் கல்வியும் ஒன்றாகும்.
  6. இலக்கவியல் (டிஜிட்டல்): இலக்கவியல் கல்வி அறிவு, கல்வியில் தொழில்நுட்பம் ஆகியவை அதீத முக்கியவத்துவம் பெற்றவையாக நாளும்  வளர்ச்சி கண்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இலக்கவியல் துறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சரி செய்யும் இலக்கை நோக்கி மலேசியா திட்டங்களை வகுத்து வருகிறது. உட்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இண்டர்நெட் தொடர்பு, டிஜிட்டல் உபகரணங்களை வழங்குவதற்குரிய முயற்சிகளில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஆன்லைன் வழி கற்பதற்குரிய வளங்களை இவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது இதன்வழி உறுதி செய்யப்படும்.
  7. மலேசியக் கல்வி கட்டமைப்பில் பண்புநலன்களும் ஒழுக்க நெறிகளும்  முக்கிய அம்ங்ங்களாகத் திகழ்கின்றன. மிகச் சிறந்த தனிநபர்களை உருவாக்குவதில் நன்னெறிப் பண்புகளையும் ஒழுக்க நெறிகளையும் மாணவர்களிடம் விதைப்பதில் மலேசிய அரசாங்கம் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. கல்வியில் மட்டுமல்லாது, சமுதாயத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு மாணவர்களிடம் இந்த உயரிய பண்புநலன்கள் இருக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. மலேசியக் கல்வியில் ஒழுக்கநெறிகளும் உயரிய பண்புகளும் முக்கிய அமசமாக இடம் பெற்றிருப்பதைக் காண்பதற்கு அரசாங்கம் விரும்புகிறது. இதன்வழி ஒரு மாணவனின் சுய மேம்பாடு மட்டுமன்றி ஒட்டுமொத்தத்தில் அவர் சார்ந்திருக்கும் சமுதாயமும்  நிமிர்ந்து பார்க்கக்கூடிய சிறப்பை எட்டும். மாணவர்கள் கல்வியில் மட்டும் திறன்மிக்கவர்களாக இருப்பதோடு மட்டுமன்றி உயர்நெறிப் பண்புகளையும்  ஒழுக்க நெறிகளையும் கொண்ட பொறுப்புமிக்க பிரஜைகளாகத் திகழவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மலேசிய அரசாங்கம் இந்த மனிதநேய கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here